Read this article in:
English |
Spanish |
Hindi |
Gujarati |
Tamil |
Marathi
2000 ஆண்டின் ஆகஸ்ட் 28 முதல் 31 வரை, உலகின் மிக முக்கிய சமய மற்றும் ஆன்மீக தலைவர்கள் இரண்டாயிரம் பேர், உலகின் பல சமய நம்பிக்கைகளைப் பிரதிநிதித்து, நியூ யார்க் மாநகரில், ஐக்கிய நாட்டுச் சபையின் “சமய மற்றும் ஆன்மீகத் தலைவர்களின் மிலெனியம் உலக சாந்தி உச்சநிலை மாநாடு” ஒன்றில் கலந்து கொண்டனர், தம்மை அமைதிக்காக உழைப்பதற்கான வாக்குறுதி வழங்குவதற்காக. இந்துஸ்ம் டுடே இதழின் ஸ்தாபகராகிய சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள், இந்து பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். ஒரு சந்திப்பில் பேசிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார்: “உலக சாந்திக்காக, வீட்டில் நடக்கும் போரை நிறுத்து.” அந்த உரை ஆசிரியர் மேடை பகுதியில் 2000 ஆம் ஆண்டின் நவம்பர்/டிசம்பர் வெளியீட்டில் பிரசுரிக்கப் பட்டது:
“ஐக்கிய நாட்டுச் சபையின் தலைவர்கள், ஒவ்வொரு தேசத்தையும் பாதிக்கும் ேவற்றுமை, காழ்ப்புணர்ச்சி மற்றும் வன்முறை ஆகியவற்றை மனித இனம் எவ்வாறு இன்னும் சற்று சிறப்பான வழியில் தீர்ப்பது என்று வினவப்பட்டபோது, நான் சொல்லிய பதில், நாம் மூலத்தையும் காரணத்தையும் நோக்கி ேவலைச் செய்ய வேண்டும், குறிகளைச் சரிசெய்வதை விடுத்து, என்பதேயாகும். இதைத்தான் நாம் ஆயுர்வேத வைத்தியத்தில் கையாளுகின்றோம், காரணங்களை நோக்கி, உடலின் இயற்கை சமநிலை மற்றும் ஆரோக்கியத்தை நிறுவுவது. இவ்வாறாக, நாம் எப்போதும் வியாதியிலும் சுகவீனத்திலும் கவனம் செலுத்தாமல், நேரத்தையும் வளங்களையும், தானாகவே வியாதிகளை விரட்டும் ஓர் ஆரோக்கியமான அமைப்பை முன்னெடுக்கப் பயன்படுத்துகின்றோம்.உலகத்தில் போரை நிறுத்துவதற்கு, நமது நீண்ட கால மிகச் சிறந்த தீர்வு யாதெனில் வீட்டில் போரை நிறுத்துவதாகும். இங்குதான் வெறுப்பு ஆரம்பிக்கின்றது, நம்மை விட வித்தியாசமனவர்களிடம் பகை உணர்ச்சி வளர்க்கப்படுகின்றது, அடி உதைக்கு ஆளான பிள்ளைகள் தம் பிரச்சனைகளை வன்முறையால் தீர்த்துக் கொள்ள முயல்கின்றார்கள்.”
இந்த உச்ச நிலை மாநாடு, ஒரு மதத் தலைவருக்கும் ஓர் ஆன்மீகத் தலைவருக்கும் இடையிலான வித்தியாசத்தை பிரதிபலிக்கச் செய்தது, என்னிடம். ஒரு மதத் தலைவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதத்தின் தலைவர். ஓர் ஆன்மீகத் தலைவர், மற்றொருவரின் ஆன்ம ஊக்கத்தை மேலெழும்பச் செய்யும் நிபுணர். சில மதத் தலைவர்கள் ஆன்மீகத் தலைவர்களாகவும் உள்ளனர், சிலர் அவ்வாறு இருப்பது இல்லை. சில ஆன்மீகத் தலைவர்கள் மதத் தலைவர்களாகவும் இருக்கின்றனர், சிலரோ அப்படி அல்ல.
என் குருதேவர் கண்டிப்பாக இரண்டுமே. உண்மையில், அவர் மற்றவரின் மதமோ, இனமோ பாராமல், மற்றவர்களின் ஆன்ம ஊக்கத்தை எழுப்பும் ஒரு நிபுணர். அவர் எப்படி இதனைச் செய்தார்? ஊக்கமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதாலேயே. ஏதாவது, ஊக்கமூட்டும், பாராட்டுவிக்க்கும், உயர் மன வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். அவர்களின் நாள் இதனால் பிரகாசமாகவும், உன்னுடையதும் அவ்வாறே ஆகும்.
உனது வார்த்தைகள் அவர்கள் ஓர் உற்சாகமற்ற காலைப்பொழுதை கடக்கவோ, அல்லது அந்நாளுக்காக புதிய ஊக்கத்தைப் பெறுவதற்காகவோ இருக்கலாம். இதை அல்லவா ஆன்மீகத் தலைவர்கள் செய்கின்றனர், மக்களின் சக்தியை மாற்றி, ஆன்ம ஊக்கத்தை எழுப்பி, தத்தம் உள் ஞானத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து, அவர்களை அந்நாளுக்கான உயரிய
காரியங்களுக்காகத் திறக்கச் செய்வது?
உனக்குத் தெரிந்தவர்களை சந்திக்கும் போது, அவர்தம் வாழ்க்கையின் சில விஷயங்களைப் பற்றிக் கேட்கலாம், பிள்ளைகள் அல்லது சமீபகால பயணம், மற்றும் அவர்களின் நலனில் அக்கறை காட்டலாம். குருதேவர் இவ்வாறான தொடர்பில் மிகவும் சித்தி பெற்றவராக இருந்தார். அதனால், அவர் காவாய் தீவின் பலதரப்பட்ட மக்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் வழங்கும் ஒரு மூலமாக இருந்தார்.
சந்திப்புக் கூட்டங்கள் மற்றவரை ஊக்குவிப்பதற்கான தலைசிறந்த வாய்ப்புக்களாகும். கவனமுடன் ஒவ்வொரு தனிமனிதரின் கருத்துக்களை கேட்டு, அவை நல்ல கருத்துக்களாக இருக்கும் பட்சத்தில், பாராட்ட தவற வேண்டாம். யாராவதும் சற்று வெட்கத்துடன் கருத்துக்களை வெளிப்படுத்தத் தயங்கினால், சில உற்சாக வார்த்தைகளைக் கூறி, அவரை நம்பிக்கையூட்ட வேண்டும். உனது கருத்துக்களினாலும், உனது பிரவேசத்தாலும் ஒவ்வொரு சந்திப்பிலும் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஒருவர் செய்த உதவிக்கு, அவரின் நட்புக்கு மற்றும் வாழ்வில் ஒட்டுமொத்த இருப்புக்கு நன்றி பாராட்டுவதால் ஊக்குவிப்பு செய்வது ஓர் ஆன்மீகத் தலைவனாக இருப்பதற்கு மற்றொரு வழி. நன்றியுணர்வுடையவர்கள் எதிலும் குறையுடையவர்கள் அல்லர். தெய்வீகச் சக்தி நிரம்பி, பரிபூரணத்துடன், தமது மகிழ்ச்சியை அதிகரிக்க எந்த பொருளையும் தேடாதவாறு, வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லாமல் இருப்பர். அவர்களின் ஆன்ம சக்தி பரிபூரணத்துடன், வாழ்க்கை அளவிடமுடியாத அளவுக்கு செழித்திருக்கும். ஆகையால் இயற்கையாகவே, அவர்கள் ஆன்மீகத் தலைவர்களாகின்றனர், எவரெல்லாம் தம் வாழ்க்கை முழுமையடைய வில்லை என நினைப்பவர்களுக்கு. நன்றிபாராட்டுதல் ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம், ஆனால் அது ஓர் ஆன்மீக முதிர்ச்சியின் அளவுகோள்.
மற்றவர்களுக்கு நன்றி பாராட்டுதல் அவர்களுடைய சுயபரிபூரணத்தையே போதிக்கின்றது. முதலாவதாக, அனைவரைக்கும் புன்னகையுடன் காலை வணக்கம், மாலை வணக்கம் செலுத்துவது. உனது மனநிலை எழுச்சியாக இருந்தால், மற்றவர்களும் அவ்வாறே இருக்க உதவியாயிருக்கும். கருணையுடன் இருத்தல் மற்றவர்களுக்கும் அவ்வாறே இருக்கும்படி ஞாபகமூட்டும். ஒரு குற்றச்சாட்டிக்கு எதிர்மறையாக இரு.
துர்திஷ்டவசமாக, இக்காலத்தில் ஒரு நல்ல காரியம் செய்யப்பட்டால், உதவிமிக்க, அன்பான ஒன்று, அது கண்டுகொள்ளப்படுவது இல்லை, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே எனக் கொள்ளப்படுகின்றது. ஆமோதித்தும் பாராட்டப் படுவதும் செய்யப்படுவது இல்லை. ஆனால் ஒரு தவறு நிகழும் பட்சத்தில், அனைவருமாக படுவேகத்தில் சுட்டிக்காட்டுவர், பெரும்பாலும் கடுமையான முறையில்.
நன்றியுடைமை அல்லது பாராட்டுதல் இல்லாமல் இருக்கும் சில வழக்கமான எடுத்துக்காட்டுக்களைக் காண்போம்.
இரண்டு பதின்ம வயது பையன்களின் தாயார் அவர்களின் வீட்டு மற்றும் பள்ளிக்கூடத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய கஷ்டப்பட்டு உழைக்கின்றார். அப்பையன்கள் இது அவரது வேலைதானே என்றெண்ணி, “நன்றி அம்மா” என்று கூடச் சொன்னது கிடையாது.
ஒரு மனைவி கணவரின் தேவைகளை கவனமுடன் கண்காணித்தும், அவரது தொழிலுக்கும் உதவியாக இருக்கின்றாள். கணவரோ, அவளது தொடர் சேவையை கண்டுக் கொள்வதே இல்லை.
ஒரு கணவர் தனது குடும்பத்தை பொருளாதார ரீதியில் உதவுவதற்காக கடினமாக உழைக்கின்றார், சமயங்களில் வார இறுதியிலும் வேலை செய்து அதிக வருமானம் ஈட்டுகின்றார். அது அவருடைய கடமைதானே என்று எண்ணும் மனைவி, எந்த நன்றியும் பாராட்டுவதில்லை.
ஒரு கண்காணிப்பாளர் தனது பணியாளர்களின் திறனையும் அவர்களின் பதவியையும்
முன்னேற்றும் நோக்கில், அதிக நேரம் செலவிடுகின்றார். ஆனால் யாரும் அந்த வழிகாட்டலுக்கு
நன்றி தெரிவிப்பது இல்லை.
குருதேவர் இந்த விஷயத்தில் இரண்டு சாதனைகளை உருவாக்கினார். ஒன்று நன்றியறியவும்
மற்றொன்று பாரட்டுக்கும். முதலில் நன்றியறியும் சாதனையை நிறைவுச் செய்து பின்னர் பாராட்டும் சாதனை. நன்றியறிதல்: ஒரு காதிதத்தையும் பேனாவையும் எடுத்து, கடந்த 5 ஆண்டுகளில் உனது வாழ்க்கையில் சந்தித்த நல்லவற்றை எழுதுவது. நினைவுகள் எழுப்பப்படும் போது, பட்டியல் நீளச் செய்யும். எந்த ஒரு நல்ல காரியமும் ஞாபகத்துக்கு வராத பட்சத்தில், “ஒளி ஆன்மீகப் பொருளாகிய நான், அனுபவம் எனப்படும் சமுத்திரத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றேன்.” என பல தடவை எழுத வேண்டும் என குருதேவர் ஆலோசனைக் கூறுகின்றார். இச்செயல் உடன்மறை ஞாபகங்களை எழுப்பி, மிக விரைவில் இன்னும் அதிகமானவற்றை தொடரச் செய்யும். ஏற்றுக்கொள்ளுமையும், கெட்டக் காலத்தில் நடந்தவற்றுக்கான மன்னிப்பு உணர்வுகளும் ஊற்றெடுக்கும். இந்த சாதனை திருக்குறளின் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில் காணப்படும் ஞானத்தைப் பிரதிபலிக்கின்றது: “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று.”
வாழ்க்கையில் இருக்கும் நல்லவற்றை உற்று நோக்குவது, இயற்கையிலேயே நன்றிபாராட்டச் செய்கின்றது. நீ நன்றி செலுத்தும் ஒருவரை அணுகி, அவர்களின் கண்களுள் ஆழமாகப் பார்த்தவாறு, நீ எந்த அளவு மரியாதையும் மதிப்பும் கொண்டு உள்ளாய் என சொல்ல வேண்டும். குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதுவே சாவி. “நீ அருமையானவர்.” போன்ற ஏதும் பொதுவானதாகச் சொல்ல வேண்டாம். மற்றபடி, குறிப்பிட்ட தன்மைகளைச் சுட்டினால், கேட்பவருக்கு நீ உண்மையிலேயே ஆழமான உணர்வுடன் சொல்லுகின்றாய் என்பது தெரியும், மேலோட்டமான வெறும் நன்றி அல்ல என்று. கருணையான வார்த்தைகள் மற்றும் சிரித்த முகத்துடன் நீ மெய்யாகவே இவ்வாறு சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ளச் செய்.
அப்பிரிசியேசன் சாதனைக்கு உன்னைத் தயார் செய்து கொள்ள, அதை உன்னிடமே பயிற்சிப்படுத்திப் பார்! ஒரு கண்ணாடியின் முன்னே நின்று, உன் கண்களுக்குள் பார்த்தவாறு, உரக்கச் சொல், “ நான் உனக்கு நன்றிபட்டு உள்ளேன், என் வாழ்க்கையில் நீ இருப்பதை போற்றுகின்றேன்.”
பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் நீ செய்த பல நல்ல காரியங்களை விவரி. உன்னை பாராட்டுவது உனக்கு சுகமாகப்படுவதை உணர்ந்தால், நீ அடுத்தவர்களை பாராட்டத் தொடங்க தயாராகின்றாய். இந்த பயிற்சியினால், நீ எதிர்நோக்கும் வெட்கத்தையும் வெல்ல முடியும்.
முக்கிய நிகழ்வுகளில் போற்றுதலுக்கு உரிய மிகச் சிறப்பான காலமாகும். பிறந்த நாட்கள் பரிபூரண வாய்ப்பு, ஏனயவை தாயார் தினம், தந்தையர் தினம் மற்றும் தாத்தா-பாட்டி தினம். பல நாடுகளில் முதலாளிமார்கள் தினமும் கூட உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், மலேசியாவிலுள்ள நமது இளைஞர் பக்தர்கள் ஓர் அதிர்ச்சி தாயார் தினத்தை ஏற்பாடு செய்திருந்தனர். என்னிடம் அதைப் பற்றி எழுதியிருந்தனர்: “வழக்கமான சத்சங் நிகழ்வு, பஜனை மற்றும் தியானத்திற்குப் பின்னர், எங்களின் அதிர்ச்சியை அறிவித்தோம், ஒவ்வொரு தாயாரையும் முன்னே அழைத்து நிற்க வைத்து, அவரின் ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பெரிய மாலையை அணிவித்து, ஒரு புத்தகக்குறி, ஒரு வாழ்த்து அட்டை, மற்றும் ஒற்றை ரோஜாப்பூ ஒன்றை (எல்லாம் எங்களாலேயே செய்யப்பட்டது) கொடுத்து, ஒவ்வொருவரும் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கி, கட்டிப்பிடித்து, நன்றாக வாழ வாழ்த்தினோம். அதற்குள் பெரும்பாலான தாயார்கள் தம் கண்களின் கண்ணீரைத் துடைப்பதிலேயே நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தனர்!”
நன்றியறிதலைச் செய்யாமல் இருப்பதற்கான பல தடைக்கற்களுள் ஒன்று, துரதிஷ்டவசமாக, யாரும் அதனைச் செய்யாமல் இருப்பதே ஆகும். முதல் நபராக இதைச் செய்வதற்கு அதிக ஊக்கம் தேவைப்படுகின்றது. உண்மையான ஆண் நன்றி பாராட்ட மாட்டார் என கலாச்சாரம் ஒரு வேளை சொல்லாமல் சொல்லக்கூடும். இந்த சூழலில், இன்னும் அதிகான ஊக்கம்் தேவை!
ஒரு பரிசுப் பொருளுடன் குறிப்பு ஒன்றை எழுதி கொடுப்பது, தனிமனிதக் கூறு சற்றே குறைந்த நன்றி நவில்தலாகும். நீயே செய்த ஒரு பரிசு, உனது கரிசனையையும், உள்ளார்ந்த நேர்மையையும் காட்டும்.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆன்மீக வழிகாட்டிகள், வியாபார பழக்கங்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் ஆகியோருடன் எவ்வளவு அடிக்கடி முடியுமோ, அவ்வளவு நன்றி பாராட்டுதலை வெளிப்படிச் சொல்லி உள்ளார் எனது குரு. உனது அன்பை மற்றவரிடம் பகிர்ந்துக் கொள்ளும் போது, குறிப்பாகவும், புன்னகையுடனும், நீ உலகத்தை மேலும் நல்ல இடமாக்கும் பொருட்டு உதவுகின்றாய் என்பதை மறக்காதே. நீ ஊக்கமூட்டும் ஒருவர் உனது நடத்தையில் இருந்து பயின்று
பின்னாளில் மற்றவர்களை தம் வாழ்க்கையில் ஊக்குவிப்பர்.
அவர் எழுதியுள்ளார்: “ அடிப்படையில் தூய ஆத்மாக்களாகிய நாம், சில காலம் ஒரு சட உடலில் வாழுகின்றோம். கடவுளால் வழங்கப்பட்ட பரிசாகிய சுதந்திர திட்பத்தை அன்பினால் உறையிட்டு, உலகத்தில் மாற்றத்தை நம்மால் செய்ய முடியும், செய்ய வேண்டும். ஒரு சிறிய அளவே ஆனாலும். நாம் அனைவரும் ஒரு சேர மாற்றத்தைச் செய்தால், அது பெரிய அளவாகும். சீடர்கள் குருவுக்கும், கணவர்கள் தம் மனைவிமார்களுக்கும், மனைவிகள் தங்கள் கணவன்மார்களுக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் நன்றி பாராட்ட வேண்டும். மற்றவர்களைப் புகழ்வதும், நம்மிடம் இல்லாததை போற்றுவதும் பலமடங்கு செயலூக்கமுள்ளது!”