Read this article in:
English |
Gujarati |
Hindi |
Marathi |
Russian |
Spanish |
Tamil
ஆன்மீக வாழ்வு அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் வேறானதல்ல, ஆனால் வாழ்க்கையின் மிகச் சிறந்தது. பெண்ணொருத்தி ராமகிருஸ்னர் கடவுளை உள்ளங்கை ஆப்பிள் போலத் தெளிவாகக் கண்டதைக் கேள்வியுறுவதாகவோ, மாபெரும் யோகிகள் பிரமிக்கவைக்கும் ஒளிவெள்ளத்தைக் காணுற்று உண்மைப் பொருள் சர்வத்திலும் ஒன்றித்திருப்பதை கண்டு வாழ்க்கைமாற்றம் அடைந்த நிகழ்ச்சியை ஒரு மனிதன் கேள்வியுறுவதாகவோ கற்பனைச் செய்வோம். இதைக் கண்ட அந்த ஆணோ பெண்ணோ ஒரு மரத்தடியிலோ அல்லது ஒரு குகையிலோ தவம் புரிய முடிவெடுக்கலாம். அல்லது பல நாட்கள் விரதமிருந்து, கடுமையான யாத்திரை பூண்டு, மந்திரங்களை மணிக்கணக்கில் செபிக்கவும் செய்யலாம். இந்த முயற்சிகளால் அவர்கள் வெற்றிப் பெற முடியுமா? அனுபவத்தின் வாயிலாக இது முடியாது என்றே தெரிகின்றது.
தினசரி வாழ்க்கையே அந்தப் பயணத்திற்கான திறவுகோலாகின்றது. ஒரு பியானோ கச்சேரிக்குச் சென்று, அங்கு உலகின் மிகச் சிறந்த கலைஞர் ஒருவர் வாசிப்பதை யாரோ ஒரு ரசிகன் செவிமடுப்பதாக வைத்துக் கொள்வோம். இசை தம்மை மெய்மறக்கச் செய்கின்றது, கலைஞனின் திறமை குற்றமற்றதாக, பரிபூரணமாக உள்ளது. ரசிகன் முடிவெடுக்கின்றான், “இதுதான் என்னுடைய பாதை. இதைத்தான் நான் செய்யப் போகின்றேன்.” அவன் பியானோவை அக்கலைஞருக்கு நிகராக வாசிக்க முயற்சிக்கின்றான், ஆனால் அந்தச் சிறப்பான இசை எழவில்லை. எத்தனை மணி நேரம் கழிந்தாலும், எந்தளவு உண்மையாக உழைப்பு இருந்தாலும், கச்சேரியில் தான் கேட்டதை அடைய அவனால் முடியவில்லை.
ஏன்? அந்த அளவு நிபுணத்துவத்துக்குத் தேவையான உழைப்பை அவன் உணர்ந்திருக்கவில்லை. வெற்றிப் பெற வேண்டுமாயின், பாதையின் ஆரம்பத்தில் தொடங்கவேண்டுமேயன்றி, நடுவிலோ முடிவிலோ இல்லை. அடிப்படைகளை நீக்கிவிட்டால், நமது முயற்சிகள் நிலைத்த ஆன்மீக வளர்ச்சியை வழங்கா. பியானோ கலைஞரின் விசயத்தில், அடிப்படைகளானவை இசைக் கோட்பாடு, நரம்பு – தசைப்பயிற்சி, மனனம், ஆராயும் செவிப்பாங்கு மற்றும் பயிற்சி, பயிற்சி, பயிற்சி. ஆன்மீக வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. மாபெரும் ஞானிகள் குகைகளில் அமர்ந்து, குறுகிய காலத்தில் ஞானஒளி பெறவில்லை. அவர்கள் தம்மை பல ஆண்டுக்கணக்கில் வேலைப்படுத்தினார்கள். சாதனைகள் செய்தார்கள், தனது பழக்க வழக்கங்களை, தனது இச்சைகளை, தனது வினைப்பாடுகளை, தனது சுயத்தன்மையையே மாற்றினார்கள். அவர்கள் அடைந்ததை நாமும் பெற விரும்பினால், நாமும் அதையேச் செய்ய வேண்டும். அதை அடைய நாம் கண்டிப்பாக உழைத்தாக வேண்டும்.
நமது ஆன்மீக வளர்ச்சி எந்த ஆதாரத்தின் மீது நிற்கின்றது என்றால், அது நமது இயல்பே ஆகும். இயல்பு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு மனிதனுக்கே உரித்தான எண்ண மற்றும் நன்னெறிப் பண்புகளே அதுவாகும். ஆன்மீகப் பாதையில், முயற்சியின் முதல் அத்தியாயம், நமது தன்மையை கட்டியெழுப்புவதும், மேம்படுத்தி, தன்மையை மாற்றியமைப்பதுமாகும். எனது குரு, சிவாய சுப்பிரமுனியசுவாமி காண்பதாவது:
“தியானத்தின் மூலமாக பேரானந்தம் வருகின்றது என்பது உண்மை, மற்றும் உயர் உணர்வுநிலைகள் மனுக்குலத்தின் சொந்தம் என்பதும் உண்மைதான். இருப்பினும், பத்து இயமங்களும் அவற்றின் பொருந்தியப் பயிற்சிகளாகிய நியமங்களும் பேரானந்த உணர்வு நிலையை நிலைநிறுத்தி வைக்க தேவையாகின்றன. எந்தப் பிறவியாயினும் தன்னையும் மற்றவரையும் பற்றிய நல்ல உணர்வுகளுக்கும் இவை முக்கியம். இந்த இயமங்களும் நியமங்களும் நமது இயல்பைக் கட்டி எழுப்புகின்றன. ஆன்மீக வளர்ச்சிக்கு இந்த இயல்பே ஆதாரம். உண்மையில் கூறின், எவ்வளவு உயரத்திற்கு நாம் செல்கின்றோமோ அவ்வளவு கீழே நாம் விழ முடியும். உச்சக் சக்கரங்கள் வேகமாகச் சுற்றுகின்றன; நமக்கு கிடைக்கத்தக்க மிகக்கீழான சக்கரங்கள் இன்னும் வேகமாகச் சுற்றுகின்றன. ஆதாரமாகிய இயல்பு நமது வாழ்க்கையாகவே கட்டியெழுப்பப்பட்டால் ஆன்மீக வாழ்க்கையில் திடத்தோடு பிரயாணப்பட தேவையான பூரண நிறைவு நிலைநிறுத்தப்படும். இப்படியான மனிதனின் பலகீனமான தன்மையைக் கண்ட மகா ரிஷிமார்கள், இந்த வழிகாட்டிகளை, அல்லது ஒழுக்கங்களை நமக்கு வழங்கினர், நமது இயல்பினை பலமாக்கும் பொருட்டு. ‘முயற்சித்திரு!’ என்றார்கள் அவர்கள். மற்றவர்களைக் காயப்படுத்தமலிருக்கவும், உண்மையாயிருக்கவும், அவர்கள் வரையறுத்த அனைத்து நற்பண்புகளையும் மதிக்க கடுமுயற்சிப்போம்.”
சின்மய மிஷனின் ஸ்தாபனர், சுவாமி சின்மயானந்தா ஆன்மீக வளர்ச்சியினை இயல்பின் மாற்றத்துடன் நேரடியாகவே தொடர்புப்படுத்தி உள்ளார்: “நம்முள் உறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை கண்டெடுக்கும் வண்ணம் நாம் நமது வாழ்க்கையை நெறிப்படுத்தினால், அந்த ஆற்றலை வளர்க்கவும் சத்தூட்டவும் நமது நடத்தைக்குக் கட்டளையிட்டால், நமது வாழ்க்கை உன்னதமாகச் செலவிடப்படும். நமது இயல்பிலும் நடத்தையிலும் எந்த அளவு மாற்றத்தை் கொண்டு வர நம்மால் முடியுமோ, அவ்வளவு வெற்றி நமக்குண்டு.”
என் குரு கூறியதாவது, “இயல்பைக் கட்டியெழுப்ப, இயமங்களுக்கு ஒத்தபடி நடக்க, ஒருவன் உணரவேண்டியது, மிருகத்தன்மையினால் நடந்து, அதனால் ஏற்பட்ட துன்விளைவுகளை மீண்டும் அனுபவிக்க வேண்டாததால், ஆக இப்போது தான் இந்த இயமங்களை பின்பற்ற வேண்டும், அந்த விளைவுகள மீண்டும் சந்திக்க வேண்டாம் என்பதால். இதுதான் ஆதாரம்; இதுவில்லையெனில், ஆன்மீக வளர்ச்சி இல்லை, பலனும் இல்லை. மிக உயர்ந்த அனுபூதிகளை இந்த அடிப்படை இன்றி பெற முயல்வது, வேர் அறுக்கப்பட்ட எலுமிச்சை மரத்தை ஒரு கூடையினுள் வைத்து அது காய்க்கும்படி எதிர்பார்ப்பதாகும். கண்டிப்பாக அது காய்க்காது.”
நாம் ஒவ்வொருவரின் இயல்புக்கும் பல குணங்கள் உள்ளன. ஓர் இயல்பு குணம் எதுவென்றால் ஒரு பழக்கம், ஒரு விதமான வகையில் சிந்தித்தல், பேசுதல் அல்லது செயல்படுதல். பெரும்பாலானவர்கள் நல்லதும் (ஆர்வம் பூண்டல், நேரம்பேணல், நம்பிக்கைக்கு பாத்திரமாகுதல், அன்புடைமை அல்லது உண்மையாயிருத்தல்) கெட்டதும் (இடித்துரைத்தல், சோம்பேறித்தனம், ஏமாற்றுதல்) கலந்த இயல்புக் குணங்களைக் கொண்டிருப்பர்.
கெட்ட இயல்புக் குணங்களை கொண்டிருப்பதற்கான பொதுவான சாக்கு ஒன்றை நாம் அனைவரும் கேட்டிருப்போம்: “நான் இப்படித்தான். என்னால் என்ன செய்ய முடியும்? இயற்கையிலேயே நான் ஒரு சோம்பேறி.” இப்பிறவியில் நாம் கொண்டுள்ள இயல்பு, கடந்த பிறவிகளில் நாம் செய்த வினைகளின் ஒட்டு மொத்தம் என இந்து மதம் போதிக்கின்றது. சிலர் பிறவியிலிருந்தே நன்னெறியுடனும், சிலர் கலப்பாகவும், சிலர் சுயநலமாகவும் ஏமாற்றியாகவும் இருக்கின்றனர். இருப்பினும் நமது பிறவித் தன்மையை சுய பிரதிபலிப்பு, சுய முயற்சி ஆகியவற்றால் நம்மால் மாற்றியமைக்க முடியும் என இந்து மதம் கற்பிக்கின்றது. தற்காலத்தில் நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம், செயல்படுகின்றோம் என்பதை கவனித்தும் கட்டுப்படுத்தியும், குறிப்பாக பாசிடிவ் எண்ணங்களையும் காரியங்களையும் செயல்படுத்துவதன் மூலம். எந்த அளவு நாம் விரும்பிய தன்மை குணத்தை வெளிப்படுத்தியும் சத்தூட்டியும் வருகின்றோம் என்பதைக் கொண்டு, அது மேலும் பலம் பெறுகின்றது.
ஒரு நெகடிவ் இயல்பு குணத்தை, எடுத்துக்காட்டுக்கு சோம்பேறித்தனம், தன்னால் மாற்றமுடியும் என நம்பிக்கைக் கொள்ளுவது முதல் அடி. இக்கோணம் நிலைநாட்டப்பட்டால், கீழ்கண்ட நான்குபடி முறையினால் எதிர்மறையான பாசிடிவ் தன்மை குணம் வளர்க்கப்பட உதவியாயிருக்கும்.
- பாசிடிவ் குணத்தை புரிந்து கொள்ளுதல்
- அக்குணத்தின் வெளிப்பாடுகளை அறிதல்
- அதன் நன்மைகளை காணல்
- அதன் வெளிப்பாடுதல்களை நடைமுறைப் படுத்துதல்
இந்த முறையைச் செயல்படுத்துவதில், பதஞ்சலி மாமுனிவரின் யோக சூத்திரத்திலிருக்கும் தத்துவத்தை மனதில் நிறுத்திக் கொள்ளலாம்: “குறையுடைய எண்ணங்களை நீக்குவதற்கு, அவற்றின் எதிர்மறையானவை வளர்க்கப்பட வேண்டும். மற்றொருவனை தாக்க வேண்டும் போன்ற குறைவான எண்ணங்கள் – செய்யப்பட்டாலோ, செய்ய தூண்டப்பட்டாலோ, அல்லது அனுமதிக்கப் பட்டாலோ, எக்காரணத்தைக் கொண்டு எழுந்த்தாலும், பொறாமை, கோபம், சொற்பத் தாக்கம், எவ்வளவு சிறிது, நடுத்தர அல்லது தீவிரம் ஆனாலும் – அறியாமைக்குள்ளும் பாதிப்புக்குள்ளும் ஒருவனைத் தள்ளத் தவறுவதில்லை. இக்காரணத்திற்காகவே ஒருவன் அதற்கு எதிர்மறையானவற்றை வளர்க்க வேண்டும்.”
இந்த நான்குபடி முறை எவ்வாறு சோம்பேறித் தனத்தை ஊக்கமிக்கதாக மாற்ற உதவுகின்றது எனக் காண்போம்.
ஒன்று: பாசிடிவ் குணத்தை புரிந்து கொள்ளுதல். நீ வளர்க்க விரும்பும் இயல்பு குணத்தைப் பற்றிய தெளிந்த புரிவு உனக்கு இருப்பதை உறுதி செய்து கொள். உனது சொந்த வார்த்தைகளிலேயே இதனை விளக்குவது ஒரு நல்ல வழி. ஊக்கமுடைமையை விளக்குவோம், “கடுமுயற்சி, ஒரு காரியத்தை முடிக்க அதிக நேரம் உழைத்தல்” அதன் எதிரான சோம்பேறித்தனம், “கடுமையாக உழைக்க விரும்பாமை, ஒன்றும் செய்ய விரும்பாதது.” பிறகு பாசிடிவ் குணத்தை ஒன்றி தியானம் செய்.
இரண்டாவது: அதன் வெளிப்பாடுகளை ஆய்தல். இக்குணத்தை கொண்டுள்ள மனிதர்களின் எண்ணங்கள், வார்த்தைகள், நடத்தை ஆகியவற்றை பட்டியலிடு. பிறகு அதற்கேற்ற எதிர்மறை குணத்திற்கு ஒரு பட்டியலிடு.
தொடர்முயற்சி | சோம்பேறித்தனம் |
---|---|
வேலையை இப்போதே செய் | வேலையைப் பிறகுச் செய் |
வேலையை முடிக்கும்வரை உழைத்தல் | சீக்கிரத்திலேயே வேலையை நிறுத்திவிடல் |
விளைச்சலை அதிகப்படியாக்கு | குறைந்தபட்ச உழைப்பே போதும் |
மூன்றாவது: அதன் பயன்களை அறிந்திரு. இக்குணங்களைக் கொண்டிருப்பதன் பயன்களைப் பட்டியலிடு. இதில் எதிரானவை பின்பற்றப்பட்டால் ஏற்படும் பிரச்சனைகளையும் சேர்க்கலாம்.
- ஊக்கம்கொண்டிருத்தல்
- குடும்பத்தாரையும் சமுதாயத்தையும் கவனிக்க அதிக பலம்
- செய்தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்புக்கள்
- உடனிருப்போரிடம் இருந்து பாராட்டுதல்கள்
- கூடிய ஊக்கம்
- ஏளனங்களைத் தவிர்த்தல்
மறைநூட்கள் உள்நோக்கினை வழங்குகின்றன. ஊக்கமுடைமை பற்றி திருக்குறள் வழங்கும் சிந்தனை, “சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.” சோம்பேறித்தனத்தைப் பற்றி திருக்குறள் எச்சரிப்பதாவது, “காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந்நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.”